முதல்வர் பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர் என திமுக எம்பி ஆ.ராசா தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திமுக எம்.பி. ஆ.ராசா முதல்வர் பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாக பேசியதாக கூறி குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளித்ததை தொடர்ந்து, முதல்வர் பழனிசாமி உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, அதிமுக தரப்பில், திமுக எம்.பி ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுகுறித்து ஆ.ராசா விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கூறியிருந்தது. இந்த நிலையில், ஆ.ராசா தேர்தல் ஆணையத்திற்கு விளக்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், திராவிட இயக்கத்தில் வளர்ந்த நான் ஒருபோதும் பெண்மையை தரக்குறைவாக பேசியதில்லை, அப்படி பேசுபவரும் இல்லை. அரசியல் தொடர்பான முறையிலேயே முகஸ்டாலின் மற்றும் முதல்வர் பழனிசாமியை ஒப்பீட்டு பேசினேன். வேறு எந்த உள்நோக்கத்துடன் தவறான அர்த்தத்திலும் நான் பேசவில்லை. பெண்களின் கண்ணியத்திற்கு குறைவாகவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியும் நான் பேசவில்லை என தெரிவித்துள்ளார்.
முதல்வர் கண்கலங்கியது அறிந்து மனம் திறந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். அதிமுகவினர் என்மீது என்னென்ன புகார்கள் வைத்துள்ளனர் என்பதை எனக்கு விளக்கமாக சொல்லுங்கள். அப்போதுதான் என்னால் விளக்கமாக பதில் அளிக்க வாய்ப்பு இருக்கும். எனது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் கொடுக்க வேண்டும். நான் என்ன தவறாக பேசினேன் என்பதை எழுத்துப்பூர்வமாக தெரிவியுங்கள் என்றும் கேட்டுள்ளார்.
மேலும், எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து பரப்பப்பட்டு வருகிறது என்பது தெரியும். முதலமைச்சர் பற்றி நான் பேசியதை அதிமுக, பாஜகவினர் திரித்து பரப்புகின்றனர். அதிமுகவின் புகார் நகலையும், தேர்தல் ஆணையம் கவனத்திற்கு எடுத்துக்கொண்ட முழு விவரங்களையும் தனக்கு அளிக்க வேண்டும் என்றும் அவற்றை பெற்றப்பின் முழு விளக்கத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…