தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது.இது வளைய சூரிய கிரகணம் என்று கூறுகின்றனர்.அவ்வாறு காலை 8 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஊட்டி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் நன்றாக தெரிந்தது. சந்திரன் சூரியனை மெல்ல மெல்ல மறைத்துக் கொண்டே வந்து நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இந்த அபூர்வ நிகழ்வை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் சூரிய கண்ணாடியின் உதவி கொண்டு பார்த்து ரசித்தனர்.
இவ்வாறு சூரிய கிரகணத்தை நாடு முழுவதும் பெரிதாக பேசிக் கொண்டும் ரசித்து கொண்டும் இருந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி சூரிய கிரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நாட்டு மக்களை போலவே நானும் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலாகவே இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தலைநகர் டெல்லியில் மேகமூட்டத்தால் கிரகணத்தை சோலார் கண்ணாடிகளின் வழியாக பார்க்க முடியவில்லை. மேலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.ஆனால் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிகளில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை நேரடி ஒளிப்பரப்புகளின் மூலம் கண்டு ரசித்தேன். கிரகணம் தொடர்பாக நிபுணர்களுடன் கலந்து உரையாடி சூரிய கிரகணம் குறித்த தனது அறிவை வளப்படுத்தினேன். மேலும் வானியல் நிபுணர்களிடம் எனக்கு தெரிந்த தகவல்கள் பற்றியும் சற்று விவாதித்தேன் என்று மோடி ட்விட் செய்தார்.
இந்நிலையில் மேக மூட்டத்தின் விளைவாக தன்னால் முழு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்து பதிவிட்ட மோடியின் புகைப்படங்கள் மீம்ஸ்களாக ஆக போவதாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரீட்விட் செய்த பிரதமர் மோடி இதனை மிகவும் வரவேற்கிறேன், மகிழ்ச்சியாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தன்னை மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்ய போவதாக தெரிவித்த ட்விட்டை ரீ-ட்விட் செய்து அதனை மிகவும் வரவேற்கிறேன் என்ற மோடியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.இதனால் சமூகதளவாசிகள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு #CoolestPM என்ற ஹஷ்டாகை உருவாக்கி அதில் பதிவிட்டு வருகின்றன. #CoolestPM ஹஷ்டாக் தற்போது உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…