#Justnow:கோடநாடு வழக்கு:விசாரணை அதிகாரி திடீர் பணியிடை மாற்றம்!

Published by
Edison

நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு  கொலை,கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது.இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் விசாரனையில் உள்ள நிலையில்,திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் வழக்கு விசாரணை தீவிரம் அடைந்தது.

அதன்படி,இந்த வழக்கு தொடர்பாக சயான் மற்றும் வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு,அனைவரும் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர். இதனைத் தொடர்ந்து,கோடநாடு எஸ்டேட் பங்களாவில் என்னென்ன இருந்தன என்பதை நன்கு அறிந்தவர் என்பதன் அடிப்படையிலும், பங்களா மேலாளர் நடராஜன் வாக்கு மூலத்தின் அடிப்படையிலும், சசிகலாவிடம் சில தினங்களுக்கு முன்னர் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை இரண்டு நாட்களாக தொடர் விசாரணை நடத்தியது.

மேலும்,விவேக் ஜெயராமன், மேலாளர் நடராஜன், முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி, அதிமுக பிரமுகர் சஜீவன் உள்ளிட்ட 200 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில்,தற்போது சஜீவன் சகோதரர் சிபியிடம் கோவை காவலர் பயிற்சி வளாகத்தில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும்,இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை ஜூன் மாதத்தில் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில்,கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் அவர்கள் தேனி மாவட்டத்திற்கு திடீரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.அவருக்கு பதிலாக குன்னூர் டிஎஸ்பியாக சந்திர சேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.நீலகிரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளராக சந்திர சேகர் பணியாற்றி வந்த நிலையில்,தற்போது குன்னூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே,கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிர்வாக காரணங்களுக்காக கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சை பாபா பணியிடமாற்றப்பட்டார்.அவருக்கு பதிலாக உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக முருகன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

2 minutes ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

29 minutes ago

ஜெலன்ஸ்கியை பின்னுக்குத் தள்ளி மாலத்தீவு அதிபர் சாதனை.! அப்படி என்ன தெரியுமா?

மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…

2 hours ago

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு முழு ஆதரவு.., பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் உறுதி.!

மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…

2 hours ago

“அங்க புக் வச்சி எழுதுறான்.., மூக்குத்தியில் பிட் கொண்டு போக முடியுமா?” – சீமான் ஆவேசம்!

சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…

4 hours ago

“இதெல்லாம் வரலாறு காணாத அத்துமீறல்!” பிரஸ்மீட்டில் சீரிய மா.சுப்பிரமணியன்!

சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…

5 hours ago