மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை தாக்கிய கொரோனா வைரஸ்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மக்களை காக்கும் பணியில், காவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் வெளியில் வந்து பணி செய்கின்றனர்.
இந்நிலையில், மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை மாநகராட்சி சார்பில், அங்கு பணியாற்றும் 71 காவலர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு காவலர்கள் யாரும் பணிக்கு செல்ல வேண்டாம் என, மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, காவல்நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காவல்நிலையம் அடைக்கப்பட்டது.
இந்த காவல்நிலையத்தின் அலுவலக பணிகள் தற்காலிகமாக மாற்று இடத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…