#Breaking: ஒரே நாளில் 13 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. 78 பேர் உயிரிழப்பு!

Published by
Surya

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாட்டுகளை அறிவித்துள்ளது. ஆயினும் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், இன்று 1,25,593 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் 12 வயதிற்குட்பட்ட 514 சிறார்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,51,487 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 3,842 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில்  தொடர்ந்து 6-ம் நாளாக 6,000-ஐ கடந்துள்ளது, குறிப்பிடத்தக்கது. இன்று 8,078 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 9,43,044 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்ட 78 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,395 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் 95,048 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

22 minutes ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

1 hour ago

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

16 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

17 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

17 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

18 hours ago