திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, அந்த பகுதி நோய் தொற்று பகுதியாக அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக, சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும், இம்மாத இறுதிவரையுள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்தது. இந்தநிலையில் அங்கு கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3,289 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றால் இதுவரை 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்தவகையில், திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகேயுள்ள ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த கிராமத்திற்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், அந்த கிராமத்தை கொரோனா தொற்று பகுதியாக அறிவித்து, கிராம எல்லைகளை மூடி, அந்த கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…