சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா ..!

சென்னையில் உள்ள ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 1,000-ஐ கடந்து வரும் நிலையில், ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நிறுவனத்தின் தரமணி, பெருங்குடி மற்றும் கந்தன்சாவடி ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் நிறுவனத்தை தற்காலிகமாக மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சக ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025