தமிழ்நாட்டில் இன்று 682 பேருக்கு கொரோனா உறுதி.. !

தமிழகத்தில் இன்று மட்டும் 682 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பாதிப்பு நிலவரம்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 682 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை, மொத்தமாக 8,26,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 201 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் எண்ணிக்கை 2,27,975 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழந்தவர்கள்:
தமிழகத்தில், கொரோனாவால் இன்று 6 பேர் பலியாகியுள்ளனர். அதில், 4 பேர் தனியார் மருத்துவமனையிலும், 2 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,228 ஆக உயர்ந்துள்ளது.
குணமடைந்தவர்கள்:
கொரோனாவில் இருந்து இன்று 869 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 8,07,744 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மாதிரிகள்:
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 60,314 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,48,85,013 -ஐ கடந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
July 9, 2025