தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக்கிக்கொண்டே வருகிறது. தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று மட்டும் 86 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு மொத்தமாக 571 -ஆக உயர்ந்துள்ளது.
இதில் ஊரடங்கிற்கு முன்னதாக ஒற்றை இலக்கங்களில் அதிகரித்த கொரோனா பாதிப்பு, அதன் பிறகு இரட்டை இலக்கம், மூன்று இலக்கம் என நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. மார்ச் மாத இறுதி வரை 124-ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஏப்ரல் 5 தேதிகளிலேயே 447 பேருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாகி தற்போது எண்ணிக்கை 571-ஆக உள்ளது.
இதில் சென்னை மாநகரம் 100-ஐ நெருங்குகிறது. 95 பேர் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் கோவை உள்ளது. இம்மாவட்டத்தில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் 38 பேர், ஈரோடுயில் 32 பேர், நாமக்கல் மற்றும் ராணிப்பேட்டையில் தலா 25 பேரும், தேனி மற்றும் கரூரில் தலா 23 பேரும், செங்கல்பட்டில் 22 பேரும், மதுரையில் 19 பெரும், விழுப்புரத்தில் 15 பேரும், திருப்பூர், சேலம் , திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 12 பேரும், விருதுநகர், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் தலா 11 பேரும், திருப்பத்தூர் மற்றும் கடலூரில் தலா 10 பேரும், திருவண்ணாமலையில் 8 பேருக்கும், கன்னியாகுமரி 6 பேருக்கும், சிவகங்கை, வேலூர் மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேரும், காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி தலா 4 பேருக்கும், திருப்பூரில் 3 பேருக்கும், ராமநாதபுரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் தலா 2 பேருக்கும், பெரம்பலூரில் ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. மொத்தம் 31 மாவட்டங்களில் 571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…