கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இல்லாத நிலையில் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.3-வது முறையாக ஊரடங்கு மே 17 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அறிவிப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள்சிவப்பு ,ஆரஞ்சு மற்றும் பச்சை என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் வேறுபடும். தமிழகத்தை பொருத்தவரை தற்போது வரைகொரோனாவால் 3550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கு இடையில் ஈரோடு மாவட்டம் தற்போது பச்சை மண்டலத்தை நெருங்கியுள்ளது.ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை அங்கு 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.அதில் ஒருவர் மட்டுமே உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 69 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர்.இதனால் ஈரோடு மாவட்டம் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியது. கடந்த மாதம் 15-ஆம் தேதிக்கு பிறகு அங்கு யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை.அரசின் அறிவிப்பின் படி 21 நாட்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக அறிவிக்கப்படும்.தற்போது ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…