டீ குடிக்க சென்ற கொரோனா நோயாளி. அதிர்ச்சியில் காவல்துறையினர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பெற்று வந்த 62 வயது முதியவர் ஒருவரை காணவில்லை என காவல்துறைக்கு திடீரென தகவல் வந்தது. காவல்துறை தேடியும், அவர்களது கையில் சிக்காமல்,விடியற்காலை மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அந்த முதியவரிடம் எங்கு சென்றீர்கள் என விசாரித்த போது,’டீ குடிக்க சென்றேன். எங்கும் கடை இல்லை.’ என பதிலளித்துள்ளார். இவரது பதிலை கேட்ட போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…