சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் முதல்வர் பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.
மேலும் அரசு சார்பில் 18 மற்றும் தனியார் சார்பில் 6 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் 21 ஆய்வகங்கள் அமைக்க அனுமதி கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம். இதையடுத்து 30 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட உள்ளது. இந்த கருவிகள் வரும் 9ம் தேதி வந்த உடனே, கொரோனா அறிகுறி உள்ளதா என விரைந்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…
யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது. இதில் பலர்…
சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…
டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…