மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகம் மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதே போல் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் நேற்று மாலை6 முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவித்த நிலையில் அது குறித்த அரசாணையையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மகேந்திரகிரியில் இயங்கி வரும் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மைய வளாகமானது மூடப்பட்டு உள்ளது. மேலும் இஸ்ரோ மையத்தில் நடைபெற்று வந்த கட்டுமான பணிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…