கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதே போல் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் நேற்று மாலை 6 முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவித்த நிலையில் அது குறித்த அரசாணையையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் காசி யாத்திரைக்கு சென்று திரும்பிய 22 பேரை மேட்டூரில் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த 16ம் தேதி காசி யாத்திரைக்காக சென்றவர்கள் மும்பைக்கு சென்று பின்னர் கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக காரில் திரும்பினர். இந்நிலையில் காரில் வந்த 10 பெண்கள் உள்ளிட்ட 22 பேரை மேட்டூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. எல்லைகள் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் விடியவிடிய ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…