கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் பரிசோதனை செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளை திருச்சி விமான நிலையத்தில் சிறப்பு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.இந்த பரிசோதனையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரை சேர்ந்த பொன்னுசாமி (46) என்பவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த இலுப்பூர் பகுதியை சேர்ந்த ஈஷா அனிபாவுக்கு(3) என்ற குழந்தைக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இருந்தது .
இதையெடுத்து 2 பேரையும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிறப்பு வார்டில் பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. முடிவு வந்த பிறகு தான் அவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா..? இல்லையா…? தெரியும் என சிறப்பு மருத்துவ குழுவினர் கூறியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 81 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள், கனடாவை சேர்ந்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…