தஞ்சாவூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த பெண்ணுக்கு கடந்த 7 ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது. அதாவது தஞ்சை மாவட்டத்தை பொறுத்தவரையிலும் கும்பகோணம், பட்டுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 16 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் டெல்லிக்கு சென்று வந்த ஒரு நபரின் வீட்டில் உள்ளவர்களுக்கு கடந்த 7 ஆம் தேதி கொரோனா பரிசோதனைகள் முடிந்து, அதன் முடிவுகள் வெளிவந்தது.
அதில் சென்று டெல்லி சென்று வந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லையென்றும், அவருடைய வீட்டில் இருந்த மருமகளுக்கு தொற்று இருப்பது உறுதியானது. பின்னர் அன்றைய தினமே அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் தற்பொழுது அந்த ஆண் குழந்தைக்கு, பிறந்த ஒரு வாரம் பிறகு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர். அதன்படி நேற்றியை தினம் குழந்தைக்கு பரிசோதனை செய்த முடிவு வந்துள்ளது. அதில் பிறந்த குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியுள்ளது.
இதுபோல அப்பகுதியில் உள்ள நபர்களுக்கு தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இதுவரைக்கும் வந்த முடிவுகளில் அந்த பகுதியில் இருக்கும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்றும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு மட்டும் தான் கொரோனா இருப்பது என்று உறுதியானது. இதனால் அந்த பெண்ணுக்கு மீண்டும் 2ம் கட்ட பரிசோதனை செய்து வருகின்றன. அந்த வகையில் மொத்தம் 3 முறை பரிசோதனை செய்யப்படும் என்றும் அதில் ஒன்று பாசிட்டிவ், இரண்டு நெகட்டிவ் வந்தால் கொரோனா இல்லை என்று உறுதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…