கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்து என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனா கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது.தற்போது மூன்றாவது கட்டமாக மே 17-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் இந்த காணொளி காட்சியில் பங்கேற்றுள்ளனர்.
அப்போது பேசிய முதலமைச்சர், அரசு அறிவிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடித்தால் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். எந்தளவிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தருகிறார்களோ அந்த அளவிற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்படும்.
பொதுமக்கள் ஒத்துழைப்பின்றி இதனை நடைமுறை படுத்துவது மிகவும் சிரமம். வைரஸ் கட்டுப்படுத்துவது பொதுமக்கள் கையில் தான் உள்ளது என தெரிவித்தார். மேலும் , கொரோனா பரிசோதனைகள் அதிகம் என்பதால் தான் பாதிப்பு எண்ணிக்கை அதிகம்.
இந்தியாவிலேயே இறப்பு சதவீதம் குறைந்த மாநிலம் தமிழகம்தான். இந்தியாவிலேயே 53 பரிசோதனை நிலையங்கள் கொண்ட மாநிலம் தமிழகம் தான். கொரோனா பாதிப்பு முதலில் உயர்ந்து பின்னர் குறையும் என்பது மருத்துவ வல்லுநர்கள் கருத்து என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே, கொரோனாவால் 8002 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 8,718 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…