கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா சிறப்பு வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று காலை உதயகுமார் என்பவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டு அங்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பவர்கள் அனுமதிக்கப்பட்டு அவ்ர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வார்டில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த, எஸ்தர் ராணி 59, ஜான் 49 மற்றும் ஜெகன் 49 ஆகியோர் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர்.இதனால் கடும் பீதியாகியது ஆனால் உயிர்ழந்த இவர்கள் அனைவரது ரத்த பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என்ற முடிவு வந்தது. இவ்வாறு இருக்க நேற்று ஒரே நாளில் 2 வயது குழந்தை உள்ளிட்ட 3 வர் அடுத்தடுத்து இதே வார்டில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களில் மரிய ஜான் 66, ராஜேஸ் 24, அருள் பெர்னோ 2 ஆகியோர் வெவ்வேறு உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை தகவலில் கூறியது.இவ்வாறு இருக்க இன்று காலை இதே வார்டில் உதயக்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார்.இதனால் ஒரே வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…