உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது.கொரோனாவால் 4,421 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து 326 பேர் வீடு திரும்பியுள்ளதாகவும், 114 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்கனவே 621 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 690 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 69 பேரில் 63 பேர் டெல்லி சென்று திரும்பியவர்கள் என்றும் மீதமுள்ள நபர்களில் 3 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், மற்ற மூவரின் தொற்றுக்கான வாய்ப்பை ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மேலும் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயதுடைய பெண் உயிரிழந்தார். இதனால் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,305 மாதிரிகள் பரிசோதனை செய்யப்டுள்ளது. வீட்டு கண்காணிப்பில் 66,431 பேர் உள்ளனர் என்றும் அரசு கண்காணிப்பில் 233 பேர் இருக்கின்றார்கள் என்று கூறியுள்ளார். இதனிடையே 28 நாட்கள் கண்காணிப்பு முடிந்து 27,416 பேர் வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டதில் 19 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் இன்றும் மட்டும் 11 பேர் குணமடைந்துள்ளார்கள் என பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை நடைபெறும் என…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…