பாரத பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று நேற்று மக்கள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக கடைப்பிடித்தனர். மக்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு வியாபாரிகள், இறைச்சிக் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் இயங்காது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் அரசின் உத்தரவை ஏற்று மக்கள் ஊரடங்கிற்க்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர்.தூங்கா நகரான மதுரையே ஒரு பகல் பொழுது முவதும் தூங்கி ஓய்வெடுத்தது என்றே சொல்லலாம். ஆனால், மதுரை மாவட்டம் மேலூரில் அதிகாரிகளின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல் வழக்கம்போல அலட்சிய்யமாக இறைச்சிக் கடைகளை திறந்து வியாபாரத்தை துவங்கியதால் வழக்கம்போலவே மக்கள் கூட்டமும் இறைச்சி வாங்க அலைமோதியது. அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி இன்று நிலவும் கிராக்கியை கருத்தில் கொண்டு கல்லா கட்டுவதற்காக மேலூர் இறைச்சிக் கடையாளர்கள் செய்த இந்த விபரீத முயற்சியால் மேலூரில் இறைச்சியை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதினர். இந்த நிகழ்வு அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. இத்தாலில் அரசின் அறிவுரையை அலட்சியம் செய்ததால் அழிந்து வருகிறது என்பதை அறிந்து மேலுர் இறைச்சி கடைகாரர்களுக்கு தெரியவில்லை போலும். எனவே அரசு கூறும் அறிவுரையை ஏற்று கொரோனாவை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று சமுக ஆர்வாலர்கள் கருதுகின்றனர்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…