அதிகரிக்கும் கொரோனா.. சென்னையில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி முடிவு!

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ள நிலையில், அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அந்தவகையில் நான் ஒன்றுக்கு 3,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அதிகபட்சமாக சென்னையில் தினசரி பாதிப்பு 1,500-ஐ கடந்துள்ளது.
இதன்காரணமாக சென்னையில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சிறப்பு காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் சுகாதார பணியாளர்கள், கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025