#Breaking: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில், தேர்தல் பிரச்சாரத்தின் பொது வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்தவகையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேர்தலுக்கு பின் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் துரைமுருகன், கொரோனாவுக்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டது, குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025