எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கில் சொத்துகளை முடக்கி பிறப்பித்த உத்தரவு நீட்டித்து லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், வேலுமணியின் நெருங்கிய உறவினர்கள் நடத்திய நிறுவனங்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.110 கோடியே 93 லட்சம் நிரந்தர வைப்பீட்டு தொகையை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கம் செய்தது.
இந்த பணத்தை பறிமுதல் செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பறிமுதல் செய்ய அனுமதி வழங்கியது. இந்த வழக்கில் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில் நிரந்தர வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்யும் உத்தரவை நிராகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்தது.
இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், நிரந்தர வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…