திமுகவில் இருக்க முடிய வில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக்கொள்ளுங்கள் என கூறி விட்டேன் என்று ஆயிரம் விளக்கு எம்எல்ஏ செல்வம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தார் திமுக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க. செல்வம்.பின்னர் எம்எல்ஏ கு.க. செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், என்னுடைய தொகுதி விவகாரங்களை குறித்து தான் ஜே.பி.நட்டா அவர்களை சந்தித்தேன். திமுகவில் உட்கட்சி தேர்தலை ஸ்டாலின் முறையாக நடத்த வேண்டும். தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை மு..க. ஸ்டாலின் கண்டிக்க வேண்டும். நான் – பிஜேபியில் இணையவில்லை.தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை சந்திக்க வந்தேன். நட்டாவை சந்தித்தத்தற்காக என்மீது நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும் என்று தெரிவித்தார்.
இதன் பின் ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ. கு.க.செல்வம் தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. டெல்லியில் இருந்து சென்னை வந்த திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தமிழக பாஜக அலுவலகமான கமலாலயத்தில் ராமர் படத்திற்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் இன்று ஆயிரம் விளக்கு எம்எல்ஏ கு.க.செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்பொழுது அவர் பேசுகையில், திமுக சார்பில் அனுப்பிய கடிதம் இன்னும் வந்து சேர வில்லை. வந்ததும் .அதற்கு பதில் கடிதம் அனுப்புவேன். திமுகவில் இருக்க முடிய வில்லை என்பதால் பொறுப்பை நீக்கிக்கொள்ளுங்கள் என கூறி விட்டேன்.மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காதது கரணம் கிடையாது.குடும்ப அரசியல் காரணமாகவே திமுகவில் இருந்து விலகுகிறேன்.வயதாகிவிட்டது,உடல்நிலை சரியில்லை,பணம் இல்லை என்பதால் என்னை ஒதுக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…