அமர் பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாஜகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வரும் அமர் பிரசாத் ரெட்டி கடந்த சில நாட்களுக்கு முன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னை பனையூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வீடு முன்பு இருந்த சுமார் 50 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பம்,  நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டதாக கூறி, அப்பகுதி மக்களும், இஸ்லாமிய அமைப்பினர் புகார் அளித்தது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அப்பகுதியில் பாஜகவினர் குவிந்தனர். தகவலறிந்து வந்த காவல்துறை கொடிக்கம்பத்தை அகற்ற ஜேசிபி வாகனத்தை வரவழைத்தது. ஆத்திரமடைந்த பாஜகவினர் ஜேசிபி மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு கண்ணாடியை உடைத்தனர். இதனால், காவல்துறைக்கும், பாஜக தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. பின்னர் கொடிக்கம்பம் அகற்றப்பட்டு, மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் ஒரு வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது!

அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததன் காரணமாக பாஜக தொண்டர்கள் சிலரை போலீசார் கைது செய்தனர். பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இதையடுத்து, குரோம்பேட்டையில் உள்ள வீட்டில் அமர் பிரசாத் ரெட்டியை போலீசார் கைது செய்யப்பட்டு அவருக்கு வரும் நவம்பர் 3ம் தேதி வரையில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் அமர் பிரசாத் ரெட்டி, மேலும் ஒரு வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். சென்னையில் தமிழக அரசின் ஏற்பாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடர்பான அரசு விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அமர் பிரசாத் ரெட்டி மீது கோட்டூர்புரம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நுங்கப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. நுங்கப்பாக்கத்தில் போக்குவரத்துக்கு போலீசாரிடம் தகராறு செய்த வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு, நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…

48 minutes ago

ஆபரேஷன் சிந்தூர்., 9 இடங்களில் அட்டாக்! பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…

1 hour ago

குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!

மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…

8 hours ago

“நேற்று பிறந்தவர்கள் எல்லாம் நான்தான் அடுத்த முதலமைச்சர் என்கிறார்கள்” – மு.க.ஸ்டாலின்.!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…

10 hours ago

MI vs GT : குஜராத் அணியின் மிரட்டல் பவுலிங்.., திணறிய மும்பை.!! இதுதான் டார்கெட்.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…

11 hours ago

ராஜஸ்தான்-பாக்., எல்லையில் போர் ஒத்திகை.., NOTAM எச்சரிக்கை கொடுத்த இந்தியா.!

டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…

12 hours ago