ஆபாச கருத்துக்களை கண்டறிய 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க நீதிமன்றம் உத்தரவு.!

- சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்டு இருந்தார்.
- இந்த வழக்கில் நீதிபதி கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்டறிய மாவட்ட , மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என கூறினார்.
சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக பதிவிட்டு இருந்தார்.இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் மருதாசலம் ஜாமீன் கேட்டு வழக்கு ஓன்று தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமூக வலைதளங்களில் ஆபாச வார்த்தைகளால் கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.இதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது எனவும் தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும் , அவதூறாகவும் கருத்துக்களை பதிவிடுபவர்களை கண்டறிய மாவட்ட , மாநில அளவில் அனைத்து காவல்நிலையங்களிலும் 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் தன்னுடைய பதிவுக்கு மன்னிப்பு கோரியதால் மருதாசலத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025