#BigBreaking:ஊரடங்கு நீட்டிப்பு..!சலூன் கடைகள்,அழகு நிலையங்கள் இயங்க அனுமதி..!

- தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அதன்படி,சலூன் கடைகள்,அழகு நிலையங்கள் போன்றவை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிப்பு செய்ய உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
இதனால், ஜூன் 14 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடியும் ஊரடங்கு 21-ஆம் தேதி வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் ஜூன் 21 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி,கொரோனா தொற்று அதிகமாகவுள்ள 11 மாவட்டங்களை தவிர,இதர 27 மாவட்டங்களில் சலூன்கடைகள்,அழகு நிலையங்கள் போன்றவை குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025