வேகமெடுக்கும் புயல்..! சென்னையை புரட்டி போட்ட கனமழை.! பொதுமக்கள் கவனத்திற்கு….

Published by
மணிகண்டன்

வங்கக்கடலில் நிலைகொண்டு சென்னை நோக்கி நகர்ந்து வருகிறது மிக்ஜாம் புயல் (Michaung Cyclone). சென்னையில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ள மிக்ஜாம் புயல் மணிக்கு 14 கிமீ வேகத்தில் கரையை நெருங்கி வருகிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

நேற்று இரவு முதல் பெய்ய தொடங்கிய அதீத கனமழையானது இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மிக்ஜாம் புயல்.! அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்… முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி.! 

ஏற்கனவே, பொதுமக்களுக்கு அரசு பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கூறியுள்ளது. அதன்படி , மக்கள் யாரும் தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து அரசு, தனியார் அலுவலகங்கள், டாஸ்மாக், ரேஷன் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

நெருங்கும் புயல்.! விபத்துக்கள் – அபாயம்.! பொதுமக்களுக்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள்…

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 278 ஏரிகள் நிரம்பிவிட்டன. இதில் 177 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவுடன் நிரம்பியுள்ளன. சென்னை சென்ட்ரலுக்கு வரக்கூடிய மைசூரு, பெங்களூரு, கோவை, திருப்பதி உள்ளிட்ட 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

புயல் கரையை கடக்கும்நேரம் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் கடற்கரைகளில்  புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  சென்னை, எண்ணூர், கடலூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் 5ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

3 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

5 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

8 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

9 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

11 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

12 hours ago