சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றசாட்டு.
சென்னை ராயப்பேட்டையில் திமுக சட்டத்துறை சார்பில் நடைபெறும் சட்ட கருத்தரங்கின் 2வது மாநில மாநாட்டில் முக ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது, சட்டத்துறையால் நிறைவேற்றப்பட்ட சிறப்புகளை குறித்து பேசிய பின், தற்போது சமூக நீதிக்கு எப்படி ஆபத்து வந்துள்ளதோ, அதேபோல சட்ட நீதிக்கும் ஆபத்து வந்துள்ளது என குற்றசாட்டியுள்ளார்.
வாசல்கள் இல்லாமல் வீடோ, வழக்கறிஞர்கள் இல்லாமல் கட்சியோ நடத்த முடியாது. சொந்த உழைப்பில் நிற்பவர்கள் நாங்கள், அடுத்தவர் உழைப்பில் நிற்பவர்கள் அல்ல. 2ஜியை நோ-ஜி ஆக்கியது நம் சட்டத்துறைதான். உள்ளாட்சி தேர்தலை நடத்த வைத்ததும் திமுக சட்டத்துறைதான். குரூப் 1 தேர்வுகளில் இருக்கும் முறைகேடுகளை கண்டறிந்து வழக்கு போட்டது நம் சட்டத்துறைதான் என கூறியுள்ளார்.
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் பணியை பெற்று தந்தது திமுகதான். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்கு தடை போட்டது தமிழக அரசு. அந்த தடையை உடைத்து எறிந்தது திமுகவின் சட்டத்துறை. புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் திமுகதான்.
எதோ பட்டியல் கொடுத்துட்டு தேர்தலுக்காக செய்கிறேன் என்று நினைக்காதீங்க, அடுத்த பட்டியல் தயாரா இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு திமுக தான் ஆட்சியில் அமர உள்ளது. ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்த்து காத்திருக்க அவசியம் இல்லை. ஆகவே, திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு பிறகு அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நாமே நடவடிக்கை எடுப்போம். குற்றம் செய்தவர்களை சிறையில் அடைப்போம் என ஆளும் கட்சியினர் மீது பல்வேறு குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…