இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16-ஆம் ஆண்டு இன்று என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சுனாமி தாக்கியதின் 16- வது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்தூவியும், கடலில் பாலை ஊற்றியும் பொதுமக்கள், மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்தோனேஷியா அருகே பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி உருவெடுத்தது. கரையை நோக்கி நகர்ந்த சுனாமி பேரலை கடற்கரையோரத்தில் இருந்த அப்பாவி மக்களை இரக்கமின்றி விழுங்கியது.
சுனாமி பேரலை இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை அகோரமாக தாக்கியது. தமிழ்நாட்டில் கடலூர், வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்ட கடற்கரைகளை வாரி சுருட்டி சென்றது. இந்த சுனாமி பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களை பறித்து கொண்டு உடைமைகளையும் தூக்கி சென்றது. இதனால் பலரும் வீடுகளை இழந்து தவித்தனர்.
இந்நிலையில், சுனாமி தினத்தையொட்டி திமுக தலைவர் முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், இயற்கையின் சீற்றத்தால் ஆறாத வடுவாகிவிட்ட ஆழிப் பேரலைப் பேரழிவின் 16 -ஆம் ஆண்டு. 2004 டிசம்பர் 26 சுனாமியில் உயிரிழந்தோரை நினைவில் ஏந்துவோம். உடைமை இழந்தோரின் உரிமை காப்போம். சீற்றங்கள் குறைந்திடும் வகையில் இயற்கை வளங்களைப் பாதுகாப்போம் என்று பகிர்ந்துள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…