இன்று மு.க.ஸ்டாலின் சிவகங்கை முதன்மை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 8-ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியில் நடைபெற்ற “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற நிகழ்ச்சியில் ஸ்டாலின் தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக கூறி மார்ச் 3 ஆம் தேதி அவதூறாகப் பேசியதாகக் கூறி அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை மாவட்ட குற்றவியல் அரசு வழக்கறிஞர் வழக்குப்பதிவு செய்தார். இதனை விசாரித்த நீதிபதி இன்று மு.க.ஸ்டாலின் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து மு.க.ஸ்டாலின் மீது அரசு சார்பில் 5 அவதூறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கு தொடரப்பட்டது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா இல்ல விழாவில் பேசியது தொடர்பான அவதூறு வழக்கை ரத்து செய்து, மற்ற 4 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…