மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு தர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது என திருமாவளவன் தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் இடஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி, தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு தர கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட அளவில் திமுக நிர்வாகிகளுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
அரியலூர் மாணவி விவகாரத்தில் மதவாத சக்திகள் அவதூறு பரப்பி வருகின்றனர். மூட நம்பிக்கை ஒழிப்புச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை அதிமுகவின் உட்கட்சி விவகாரம். நவநீதகிருஷ்ணன் மீதான நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…