கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை அகற்றி கலைஞர் நூலகம் அமைப்பதற்கு அதிமுக எதிர்ப்பு.
மதுரை நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் கலைஞர் நினைவு நூலகம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கலைஞர் நினைவு நூலகம் கட்டவுள்ள இடத்தில் முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லம் உள்ளது.
இந்நிலையில், கர்னல் பென்னிகுக் வாழ்ந்த இல்லத்தை அகற்றி விட்டு கலைஞர் நினைவு நூலகம் கட்ட கூடாது என அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கலைஞர் நூலகம் அமைப்பதற்காக கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடிப்பது கண்டிக்கத்தக்கது. மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடிப்பது சரித்திரத்தைச் சிதைப்பதற்கு சமம். யாருக்கும் ஆட்சேபனை இல்லாத இடத்தில் கலைஞர் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென் தமிழகத்து மக்கள் எதிர்ப்பையும் மீறி அமைக்கப்பட்டால் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக போராடும் என ஈபிஎஸ், ஓபிஎஸ் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்பட திறப்புவிழா நாளை மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…