வளர்ச்சி திட்டங்கள் – முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Tamilnadu CM MK Stalin

தமிழகத்தில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். அதன்படி, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு இன்று ஆலோசனையில் ஈடுபடுகிறது.

அமைச்சர் ஐ.பெரியகருப்பன், எம்பிக்கள் டிஆர் பாலு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் மற்றும் பி.ஆர்.நடராஜன் குழுவில் உள்ளனர். மேலும், திருநாவுக்கரசர், திருமாவளவன், நவாஸ்கனி, ஆர்எஸ் பாரதி, நவநீதகிருஷ்ணன் ஆகியோரும் குழுவில் உள்ளனர். இதுபோன்று எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், டாக்டர் எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் பவுலானா, செங்கோட்டையன் முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

100 நாள் வேலை திட்டம், ஜல் ஜீவன் திட்டம், தேசிய ஊரக வாழ்வாதாரம் இயக்கம் மற்றும் அனைவருக்கும்  கல்வி திட்டம் குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதுபோன்று, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், பிரதம மந்திரி திறன் மேம்பாட்டு உள்ளிட்ட திட்டங்கள் பற்றியும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்