ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறிய டிஜிபி..!

Default Image

ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு

திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர்  திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொலைசெய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் திருச்சி, திருவெறும்பூரில் 30 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், ஆடு திருடிய கும்பலால் கொல்லப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பூமிநாதன் வீட்டிற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சைலேந்திர பாபு, எஸ்.ஐ.பூமிநாதன் படத்திற்கு  மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், மறைந்த பூமிநாதன் விவேகமான முறையில் பணியாற்ற கூடியவர். ஏற்கனவே தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்ட பூமிநாதன் முதலமைச்சர் பதக்கத்தையும் வென்றுள்ளார். ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் உயிருக்கு ஆபத்து என்கிறபோது துப்பாக்கிகளை பயன்படுத்த காவல்துறையினர் தயங்க கூடாது என காவல்துறையினருக்கு அறிவுரை  வழங்கியுள்ளார்.மேலும், பூமிநாதனை கொலை செய்த கொலையாளியின் தாயாருக்கு போன் செய்து அறிவுரையும் வழங்கியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்