மதுரையில் காவல்துறை உயரதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு ஆலோசனை…!

Default Image

புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில்  காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை.

புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள சைலேந்திரபாபு அவர்கள், மதுரையில்  காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவல் ஆணையர்கள், டிஐபி உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகள் மீது எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளது. குற்றத்தடுப்பு பணிகள் குறித்தும் அறிவுரை வழங்கியுள்ளார். சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மதுரையை பரபரப்பாக்கிய குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாகவும் கேட்டறிந்தார். பின்  சிறப்பாக செயல்பட்ட 18 காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் வகுமதி மற்றும் பாராட்டு சான்றிழ்களை கொடுத்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்