DGP Sylendra babu [image source : tnfrs.tn.gov.in]
நீச்சல் பயிற்சி என்பது வெறும் விளையாட்டு அல்ல அது உயிர்காக்கும் பயிற்சி என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற நீச்சல் பயிற்சி போட்டி விளையாட்டு நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு விருந்திரனாக கலந்துகொண்டார். அப்போது, அந்த விழாவின் போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நீச்சல் போட்டியின் தேவைகள் பற்றி குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், நீச்சல் போட்டி என்பது வெறும் விளையாட்டு போட்டி அல்ல அது உயர்காக்கும் பயிற்சி. கிராம புறங்களில் உள்ளன சிறுவர்கள் அருகில் உள்ள குளம், ஆறு போன்ற நீர்த்தேக்கங்களில் நீச்சல் பயிற்சி பெறுகின்றனர். நகரத்தில் உள்ள மாணவர்கள் அதனை கற்றுக்கொள்வதில்லை. இதனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் அருகில் உள்ள நீச்சல் குளங்களில் நீச்சல் பயிற்சிக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டும்.
சர்வதேச ஒலிம்பிக் போட்டியில் 21 வகையான நீச்சல் விளையாட்டுகள் இருக்கின்றன. ஆனால் அதில் இந்தியர்கள் பதக்கங்களை வெல்ல முடிவதில்லை என கூறிய அவர், நீச்சல் பயிற்சியில் பதக்கங்கள் வென்றால், கல்லூரிகளில் இடஒதுக்கீடு, அரசு வேளைகளில் இடஒதுக்கீடு இருக்கிறது என கூறி நீச்சல் பயிற்சி அவசியம் பற்றி டிஜிபி சைலேந்திரபாபு குறிப்பிட்டு பேசினார்.
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…
சென்னை : தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை எம்.பி-க்களின் பதவிக்காலம், வரும் ஜூலையில் நிறைவடைய இருக்கும் நிலையில், அடுத்த தேர்தல்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பா.ம.க.வில் வெடித்துள்ள உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. ராமதாஸ்…
கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…
சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…