தேசிய குடியுரிமை திருத்த சட்டம், என்.ஆர்.சி, ஜே.என்.யு மாணவர்கள் மீது தாக்குதல் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். இதில் ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகிய முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் அனைத்து எதிர்கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா, பகுஜன் சமாஜ் ஆகிய காட்சிகள் கலந்துகொள்வதில்லை என ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பாக சரத்பவார் கலந்துகொண்டார்.
காங்கிரஸ் கட்சியின் நெருங்கிய கூட்டணி கட்சியான திமுக இதில் கலந்துகொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது. இதுவரை காங்கிரஸ் கட்சி சார்பாக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் பெரும்பாலும் திமுக கலந்துகொண்டது. அப்படி இருக்க இந்த கூட்டத்தை புறக்கணித்தது ஏன் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது குறித்து திமுகவின் டி.ஆர்.பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்திற்கு தி.மு.க கட்டுப்படவில்லை என்று கே.எஸ். அழகிரி எங்கள் ஸ்டாலினைக் குற்றம்சாட்டிய பிறகு காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும். கூட்டணியில் பிரச்னை இருந்தால் ஸ்டாலினிடம் கே.எஸ்.அழகிரி நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு காங்கிரஸ் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி திடீர் அழைப்பு விடுத்துள்ளார்.இதனால் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தார் அழகிரி. தி.மு.க. உடனான கருத்து மோதல் குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…