kodaikanal - kutralam [file image]
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில மலைப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உதகை, கொடைக்கானல், தென்காசி, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (மே 19 ஆம் தேதி) முதல் (மே 21 ஆம் தேதி) வரையிலான காலகட்டத்தில் முதல் 5 நாள்களுக்கு அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பகிர்ந்து, சுற்றுலா செல்வோர் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அதாவது நேற்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிச் சிறுவன் உயிரிழந்த நிலையில், குற்றால அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்குதடை விதித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…