இந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்

குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் ஓசூரில் சேதமடைந்த வணிக வளாகத்தை புதுப்பிப்பதற்காக கடையை காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஓசூர் ஆட்சியர் மனுதாரர்கள் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீதிபதிகள் கருத்து கூறுகையில், குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல, சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025