அதிருப்தி: நிர்வாகிகளுடன் காணொலியில் ஆலோசனை நடத்திய நடிகர் விஜய்.?

நடிகர் விஜய்யின் சென்னை பனையூர் வீட்டில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம். ஆலோசனை கூட்டத்தில் நடிகர் விஜய் பங்கேற்கவில்லை என தகவல்.
நடிகர் விஜய் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி, இன்று விஜயின் பனையூர் பண்ணை வீட்டில் ஏரளமான ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் குவிந்தனர். ஊடகங்களுக்கு இந்த தகவல் கசிந்ததால் விஜய் ஆலோசனை கூட்டத்தில் பங்கேறக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால், ரசிகர்களை பனையூர் அலுவலகம் வரவழைத்து நடிகர் விஜய் காணொலி வாயிலாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. காணொலியில் பேசிய விஜய், நீங்கள் நினைப்பதுபோல் அனைத்தும் விரைவில் நடைபெறும் என்று மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!
July 11, 2025
சரிவை சந்தித்த எலான் மஸ்க் சொத்து மதிப்பு! என்ன காரணம்?
July 11, 2025