Sekar Babu
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை (திங்கட்கிழமை) 12.20 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில்” நாளை அயோத்தி கோயில் குடமுழுக்கு நேரலையை கோவில்களில் ஒளிபரப்பவும், சிறப்பு பூஜைகள் நடத்தவும் காவல்துறையை அனுமதி மறுப்பது கண்டத்துக்குரியது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை நடத்த நாளை அனுமதிக்கப்படவில்லை, பந்தல்களை அகற்றுவோம் என ஏற்பாட்டாளர்களை காவல்துறை மிரட்டுகிறது. இந்து விரோத, வெறுக்கத்தக்க செயல் கண்டனத்திற்குரியது “என பதிவிட்டுள்ளார்.
3 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!
இந்நிலையில், அமைச்சர் சேகர்பாபு தனது எக்ஸ் தளத்தில் “சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசைதிருப்புவதற்காக திட்டமிட்ட வதந்தி பரப்பப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் ராமர் பெயரில் பூசை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை.
முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது” என விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…