தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.!

Published by
கெளதம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர்,  அவரது மார்பில் அதிக சளி தேங்கி இருந்ததன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், அவரது நெஞ்சு பகுதியில் உள்ள சளியை அகற்றுவதற்கான சிகிச்சைகள்  நடைபெற்றது. மேலும் சிகிச்சை தொடர்பாக மருத்துவமனை சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியிடப்பட்டு வந்தது. இதனைத்தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும்  விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வந்தனர்.

தனது அரசியல் வரிசை அறிவித்தார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி!

தற்பொழுது, தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியதாக மியாட் மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உறுதிசெய்துள்ளது. சளி, மற்றும் உடல்நல பாதிப்பு காரணமாக சுமார் ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது உடல்நிலை பூரணமாக குணமடைந்ததால் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பியுள்ளார் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

7 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

8 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

9 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

10 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

11 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

12 hours ago