திருநெல்வேலியில் திமுக 4-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மாவட்ட கழக பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் தற்போது திருநெல்வேலி, தென்காசி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, திமுக 4 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்கான மாவட்டப் பொறுப்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர்களை துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அதன்படி, திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்தியப் பகுதி, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு என நான்கு பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகுதிகளுக்கான உறுப்பினர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர்கள் அடங்கிய பட்டியலை துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
1. திருநெல்வேலி கிழக்கு: அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு பொறுப்பாளர் ஆவுடையப்பன் நியமனம்.
2. மத்திய திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகைதிகளுக்கு பொறுப்பாளராக அப்துல் வஹாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
3.தென்காசி வடக்கு: வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், ஆகிய பகுதிகளில் பொறுப்பாளராக ஆ. துரை நியமனம்.
4. தென்காசி தெற்கு: சங்கரன்கோவில் (தனி), தென்காசி, ஆலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு பொறுப்பாளராக சிவபத்மநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…