பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் – துரைமுருகன் அறிக்கை

Published by
Venu

பதவி கிடைக்காவிட்டாலும் திமுகதான் என்று  துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏதோ எனக்கு பொதுச்செயலாளர் பதவி கிடைக்கவில்லை’ என்ற ஏக்கத்தில் கழகத்துக்குள் கலக்கத்தை உருவாக்க நான் முனைவதுபோல், ஒரு செய்தியை – அதிலும், தலைப்புச் செய்திகள் தினமலர் (7.8.2020) அன்று காலை வெளிவந்த இதழில் வெளியிட்டு இருக்கிறது.

இது என்மீது ஒரு களங்கத்தை கற்பிக்கின்ற வகையில் செய்தி வந்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.என் வரலாறு தினமலருக்கு தெரியாது போலும். எம்.எல்.ஏ, எம்.பி, – அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என்று இந்த இயக்கத்திற்கு வந்தவன் அல்ல துரைமுருகன், அண்ணாவின் திராவிட நாடு கொள்கைப் பார்த்து ஒரு போராளியாக 1953ஆம் ஆண்டு இந்த இயக்கத்திற்கு வந்தவன். நான் இதுவரை பெற்ற பதவிகள் எனக்கு கிடைக்காமல் போய் இருந்தாலும், கட்சியின் அடிமட்ட தொண்டனாக இருந்து, இருவண்ண கொடியை பிடித்துக் கொண்டு கழகத்திற்காக கோஷமிட்டே இருப்பவன் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவன் நான் என்பது தினமலருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

ஆளுங்கட்சிக்கு பல்லக்கு தூக்குவது

அமைச்சர்களுக்கு கவரி வீசுவது

அதனால் ஆதாயம் பெறும் தினமலருக்கு

ஒரு லட்சியவாதியின் வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.

சுமார் 60 ஆண்டுகளாக என்னை நன்கு அறிந்தவர்கள் எங்கள் இயக்கத் தோழர்கள். தினமலர் தில்லுமுல்லு பிரச்சாரம் அவர்களிடம் எடுபடாது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

9 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

10 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

11 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

12 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

13 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

14 hours ago