ஜோதி ஸ்ரீதுர்கா குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரம், இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை, ஆனால் மாணவி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜோதி ஸ்ரீ துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 1 மணி வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஜோதிஸ்ரீயின் பெற்றோரை அருப்புக்கோட்டையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.மேலும் திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியும் அளித்தார்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…