இன்று திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.
இதனிடையே 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, குழு அமைத்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார். டி.ஆர்.பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், பேராசிரியர் அ.ராமசாமி உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கை குழுவில் இடம்பெற்றனர்.
இதன் பின் திமுக தேர்தல் அறிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு அறிக்கை வெளியிட்டார்.அவரது அறிக்கையில், இன்று (அக்டோபர் 14-ஆம் தேதி) திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.இந்த கூட்டத்தில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குஜராத் : கடந்த ஜூன் 2 ஆம் தேதி அகமதாபாத் விமான விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்தவர்களில் உயிர்பிழைத்த ஒரே…
டெல்லி : நெடுஞ்சாலை பயணங்களை எளிமையாக்கவும், சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கவும், ரூ.3,000 மதிப்பிலான FASTag அடிப்படையிலான வருடாந்திர பாஸ்…
சென்னை : பாமக கவுரவத்தலைவர் ஜி.கே.மணி நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, சேலம் மேற்கு தொகுதி…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…