முதலமைச்சர் தலைமையில் தொடங்கியது திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முதலமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான முக ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் எப்படி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ஆம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025