தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்கு இடமில்லை? திமுக எம்.பி பரபரப்பு குற்றசாட்டு!

தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்றுக்கொடுப்பதில்லை எனக் கூறி திமுக எம்பி அருண் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும் என நோக்கத்தோடு மத்திய கல்வி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. PM Shri திட்டமானது தேசிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வண்ணம் உள்ளது என தமிழக அரசு அதனை ஏற்க மறுக்கிறது.

மும்மொழி கொள்கை எனக் கூறும் PM Shri திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்றும் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கலாம் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் கூட தமிழ் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை எனக் திமுகவினர் தொடர்ந்து குற்றசாட்டி வருகின்றனர்.

இதே குற்றசாட்டை பெரம்பலூர் திமுக எம்பி கே.என்.அருண் நேரு முன்வைத்துள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், ” மத்திய அரசின் மொழி கொள்கையில் தமிழ்நாட்டிலும் கூட தமிழ் மொழிக்கு இடமில்லை என்பது PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் (முன்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்) மூலம் மீண்டும் தெளிவாகிறது.

திருச்சிராப்பள்ளியில் உள்ள PM Shri கேந்திரிய வித்யாலயா எண் 2, 2025-26 கல்வியாண்டிற்கான ஒப்பந்த ஆசிரியர் பணியிடங்களுக்காக நேர்காணல் அறிவிப்பை 16-03-2025 அன்று வெளியிட்டுள்ளது. இதில், PGT (பட்டதாரி ஆசிரியர்) பணிக்கு பொருளாதாரம், ஆங்கிலம் TGT (பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்) பணிக்கு இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் PRT (முதன்மை ஆசிரியர்) பணிக்கு பொது மற்றும் இசைபோன்ற பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.

ஆனால், தமிழ் மொழிக்கு எந்த பணியிடமும் குறிப்பிடப்படவில்லை. இது தமிழ்நாட்டின் மொழியை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கற்பிக்க விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், RTI தகவல்களின்படி, தமிழ் ஆசிரியர்கள் இல்லை, ஆனால் இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்கள் பெருமளவில் உள்ளனர். இந்த பள்ளிகள் தற்போது PM Shri என்ற பெயரில் மறுபெயரிடப்பட்டு, தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் அதன் முக்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது.

ஆனால் உண்மையில், இந்த பள்ளிகள் இன்னும் இருமொழி கொள்கையை (இந்தி மற்றும் ஆங்கிலம்) மட்டுமே பின்பற்றுகின்றன, தமிழ்நாட்டின் மொழியான தமிழை கூட அவர்கள் கற்பிக்க விரும்பவில்லை. ஆனால், இப்பள்ளிகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது. சமீபத்திய நிகழ்வுகளில் மத்திய கல்வி அமைச்சர் NEP 2020 வலியுறுத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றி செயல்படும் PM Shri பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடவில்லை என்ற காரணத்தால், சமக்ர சிக்ஷா திட்டத்தின் (SSA) மூலம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய 2000 கோடி அளவிலான நிதியை நிறுத்தி வைத்து, சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார்.

இது தமிழ்நாட்டின் மொழியியல் அடையாளத்தையும், தமிழ் மக்களின் உரிமைகளையும் புறக்கணிப்பதாகும். தமிழ்நாடு இரு மொழி கொள்கையை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) பின்பற்றுகிறது, மற்றும் இந்தியை திணிக்கும் முயற்சியாக NEP 2020-ஐ எதிர்க்கிறது. ஆனால் மும்மொழி கொள்கையை வலியுறுத்தும் ஒன்றிய அரசு, தனது சொந்த பள்ளிகளில் கூட மாநில மொழியான தமிழை சேர்க்க மறுக்கிறது. மத்திய அரசு தமிழ்நாட்டின் பண்பாட்டையும் மொழியையும் மதிக்க வேண்டும். PM Shri கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும், மேலும் SSA நிதிகளை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
UPSC CSE 2024
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly