திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக தொடரும் சோதனை!

Published by
பாலா கலியமூர்த்தி

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இருந்தவர் தான் தற்போதைய திமுக எம்பி ஜெகத்ரட்சகன். இதன்பின், 2009ல் திமுகவில் இணைந்த அவர், லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சரானார்.அப்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், நிலக்கரி சுரங்க முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2020ல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையை தொடர்ந்து அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சமயத்தில், அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுலவகம், கல்லூரி உளிட்ட பல்வேறு இடங்கள், அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் கடந்த 2வது நாளாக வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

நேற்று முன்தினம் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. அதன்படி, நேற்று முன்தினம் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உறவினர்கள், நண்பர்கள் என ஒரு சில வீடுகளில் சோதனை நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில், நேற்று அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு, பூந்தமல்லியில் உள்ள கல்லூரி,  தி நகரில் உள்ள ஹோட்டல், பட்டாபிராமில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்து சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியிருந்தது.

எம்பி ஜெகத்ரட்சகன், பல நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும், அதற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் 3ஆவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் அவரது வீடுகளில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புடன் ரெய்டு நடைபெறுகிறது. மேலும், திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் இன்று 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

7 minutes ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

39 minutes ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

43 minutes ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

1 hour ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

3 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago